கோவை மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இன்று முதல் ஜூலை 21 வரை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

மத்திய மண்டலத்தில் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரையிலும், கிழக்கு மண்டலத்தில் 13ம் தேதி மற்றும் 14ம் தேதி வரையிலும், மேற்கு மண்டலத்தில் 15ம் தேதி மற்றும் 16ம் தேதி வரையிலும், வடக்கு மண்டலத்தில் 17ம் தேதி மற்றும் 18ம் தேதி வரையிலும், தெற்கு மண்டலத்தில் 20ம் தேதி மற்றும் 21ம் தேதி வரை 5 மண்டலங்களிலும் முகாம்கள் நடைபெறவுள்ளது.

இதில் ஹீமோ குளோபின், ரத்தவகை கண்டறிதல், ரத்த சக்கரை அளவு, ரத்த கொழுப்பு அளவு, பித்த திரமி, யூரியா கிரியட்டினின் வி.டி.ஆர்.எல், எச்.ஐ.வி மாதிரி பரிசோதனை, இ.சி.ஜி ஸ்கேன் கர்ப்பபை வாய் ஆகிய பரிசோதனைகள் மற்றும் சிறப்பு மருத்துவர்களால் புற்றுநோய் பரிசோதனை, மார்பக புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மேல்சிகிச்சைக்காக பரிந்துரை செய்யபடும்.