பிளாஸ்டிக் பை இல்லா தினத்தை முன்னிட்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி சார்பில், கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் பிளாஸ்டிக் மாசுபாட்டின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அலுவலர் மகேஷ்குமார், பள்ளியின் முதல்வர் டயானா மற்றும் அறக்கட்டளையின் பொது தொடர்புத் துறை பொது மேலாளர் பிரகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாணவர்கள் பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில் வீதிநாடகம் நடைபெற்றது.

தொடர்ந்து, பேரணியில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைத் தவிர்த்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டுமென பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், மாணவர்கள் பொதுமக்களுக்கு காகிதப் பைகள் மற்றும் துணிப் பைகளை வழங்கி, அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பைகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.