டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் செயலர் தவமணிதேவி பழனிசாமிக்கு மலர்தூவி புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

கல்லூரி முதல்வர் சரவணன் வரவேற்புரை வழங்கினார். டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் மருத்துவர் அருண் பழனிசாமி தலைமையுரை வழங்கி, மாணவர்கள் தங்களது இலக்குகளை தெளிவாக நிர்ணயித்து அதற்கேற்ப முயற்சியுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அறங்காவலர் மதுரா அருண் பழனிசாமி வாழ்த்துரை வழங்கி, உயர்கல்வி, தனித்திறன் மேம்பாடு மற்றும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

மேலும், அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் புவனேஸ்வரன் மற்றும் கல்விக்குழுமங்களின் இயக்குநர் முத்துசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.