கே.ஐ.டி. கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் வணிக அமைப்புகள் துறை சார்பில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் தொழில்துறை நிபுணர்களுடன் மாணவர்களுக்கான தொழில்துறை கலந்துரையாடல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

KIT2 scaled

நிகழ்ச்சியில், டி.சி.எஸ். நிறுவனத்தின் மனிதவளத் துறையின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கல்விக் கூட்டாண்மை பிராந்தியத் தலைவர் ரவி குமார் மூர்த்தி பேசுகையில், தொழில்துறைப் புரட்சியில் தொடங்கி செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங், டிஜிட்டல் மாற்றம் வரை தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வாறு முன்னேறியுள்ளது என்பதை விளக்கினார்.

மாணவர்கள் ஆராய்ச்சி, தொழில்நுட்பப் போட்டிகள், புதுமைச் சவால்கள் ஆகியவற்றில் தொடர்ந்து பங்கேற்று தன்னம்பிக்கை, தலைமைத்துவத் திறன் மற்றும் புதுமைச் சிந்தனையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

தொடர்ந்து, டி.சி.எஸ். நிறுவனத்தின் மூத்த வணிகப் பங்குதாரரும் தொழில்நுட்பத் தலைவருமான கிருஷ்ணன் கணேசன் பேசுகையில்: அறிவு, தொழில்நுட்பத் திறன், நேர்மறை மனப்பான்மை, தகவல் தொடர்புத் திறன் ஆகியவை தொழில் வெற்றிக்கான அடித்தளங்கள். பகுப்பாய்வுத் திறன், சிக்கல் தீர்க்கும் திறன் மற்றும் தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்திக் கொள்ள வலியுறுத்தினார்.

சைபர் பாதுகாப்பு, பொருட்களின் இணையம் உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளில் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடி, வேலைவாய்ப்பு, நேர்முகத் தேர்வு மற்றும் தொழில்துறை எதிர்பார்ப்புகள் குறித்து ஆலோசனைகளையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில், கல்லூரியின் நிறுவனர் தலைவர் பொங்கலூர் நா. பழனிசாமி, துணைத் தலைவர் இந்து முருகேசன், முதன்மை செயல் அலுவலர் மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ராமசாமி, மாணவர்கள் கலந்து கொண்டனர்.