விவசாயக் கருவிகளுக்கான பட்டியலில் வேளாண் டிராக்டர்களையும் இணைக்க வேண்டும், வேளாண் டிராக்டர் டீசலுக்கு முழுவரி விலக்கு கொடுத்திட வேண்டும் என்பது போன்ற சில கோரிக்கைகளை வலியுறுத்தி
தேசிய அளவில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் போராட்டம் நடைபெறுகிறது.
இடத்தி முன்னிட்டு மாநில அளவில் இன்று தமிழகத்திலும் இந்த போராட்டம் நடைபெற்றுவருகிறது.மாவட்ட ஆட்சியர்கள் வழியாக பிரதமர், முதல்வர் ஆகியோர்களுக்கு மாவட்ட சங்கங்கள் மூலம் இந்த மனுக்கள் அனுப்பப்ப விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இது தொடர்பாக போராட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் பிரதமர், முதலமைச்சருக்கு விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கை கடிதம் அனுப்பவேண்டி, அதற்கான கோரிக்கை கடிதம் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமாரிடம் வழங்கப்பட்டது.
(கூடுதல் தகவல் விரைவில்)

