கோவையில் இன்றைய தங்கம் விலை நிலவரத்தில் பெரிய அளவு உயர்வோ குறைவோ இல்லை.

மக்கள் அதிகம் விரும்பும் 22 காரட் தங்கம் 1 கிராம் இன்று ரூ. 14,499 ஆக உள்ளது. அதன் 1 பவுன் (8 கிராம்) ரூ. 1,15,992 ஆக உள்ளது.

கிராம் அளவில் பார்த்தால் நேற்றை விட ரூ.1 தான் குறைவு. பவுன் அளவில் ரூ.8 குறைவு. ஆனால் சென்ற மாதம் (மே) துவக்கத்தில் 22 காரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.13,920 ஆக இருந்தது. இது இன்று சுமார் ரூ. 15,000த்தை நெருங்கியுள்ளது.

இதனால் சென்ற மாதம் வெறும் 1 கிராம் தங்கம் வாங்கியவர்களுக்கு இம்மாதம் ரூ.579 லாபம், அதுவே 1 பவுன் (8 கிராம்) வாங்கியவர்களுக்கு ரூ.4,632 லாபம்.

இன்றைய 18 காரட் மற்றும் 24 காரட் தங்கத்தின் விலை

18 காரட் தங்கம் 1 கிராம் ரூ. 12,179, அதன் 1 பவுன் ரூ.97,432. சுத்தத்தங்கம் என்றழைக்கப்படும் 24 காரட் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.15,817, அதன் 1 பவுன் ரூ.1,26,536.

PC : DiscoveryAlert