10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் தேர்வெழுதிய கோவை மாநகராட்சிப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களில் 1748 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்து உள்ளனர். 104 பேர் மட்டும் தேர்ச்சி அடையவில்லை என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை கோவை மாநகராட்சி பள்ளிகளின் 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 94.38% ஆக உள்ளது. மேலும் மொத்தம் 5 மாநகராட்சி உயர்நிலை பள்ளிகள் – மணியக்காரன்பாளையம், ஒக்கிலியர் காலனி, வடகோவை, சித்தாபுதூர் மற்றும் ராமசாமி நகர் பள்ளிகள் இம்முறை 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

+2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆலோசனை
இந்த ஆண்டு 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியர்களின் உயர்கல்வி தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இன்று ஆர்.எஸ்.புரம் எஸ்.ஆர்.பி.அம்மணி அம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்விற்கு மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தலைமை தாங்கி, மாணவிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

