இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அவ்தார் ஹியூமன் கேப்பிட்டல் டிரஸ்ட் இணைந்து ‘ப்ராஜெக்ட் புத்ரி’ தொழில் வழிகாட்டல் மாநாடு நடத்தியது.
நிகழ்ச்சியை அவ்தார் ஹியூமன் கேப்பிட்டல் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் சௌந்தர்யா ராஜேஷ் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மாநகராட்சி தலைமை செயல் அலுவலர் குணசேகரன், அவ்தார் ஹியூமன் கேப்பிட்டல் டிரஸ்ட் அறங்காவலர் உமாசங்கர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்லூரி செயலாளர் சரசுவதி தலைமை உரையாற்றினார். கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, ப்ரொபெல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் குழுமத் திறன் ஆட்சேர்ப்பு தலைவர் பிரதாபன் ஆகியோர் தொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்புத் திறன்கள் மற்றும் எதிர்கால தொழில் வளர்ச்சி குறித்து பேசினர்.
நிகழ்ச்சியில் தொழில் திட்டமிடல், உயர்கல்வி வாய்ப்புகள், வாழ்க்கைத் திறன்கள், தலைமைத்துவப் பண்புகள் மற்றும் ஆளுமை மேம்பாடு கலந்துரையாடல் அமர்வுகள் நடைபெற்றன. இதில் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 500 மாணவிகள் கலந்து கொண்டனர்.
