கோவை சத்தி சாலை வழியே அமைந்துள்ள கணபதி டெக்ஸ்டூல் பேருந்து நிலையம் எதிரே தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பர ஃப்ளெக்ஸ் பேனர் ஒன்று வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் இடையூறு எற்படுத்தும் விதமாக மின் கம்பம் ஒன்றில் கட்டப்பட்டிருந்தது.

பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு இதுகுறித்து ‘தி கோவை மெயில்’ சார்பில் மாநகராட்சியின் கவனத்திற்கு கொண்டு செல்ல செய்தி வெளியான நிலையில் இன்று மாலை அந்த ஆபத்தான ஃப்ளெக்ஸ் பேனர் அப்புறப்படுத்த பட்டுள்ளது.

