மாநில அளவிலான பிசியோதெரபி கல்லூரி முதல்வர்கள் மாநாடு மற்றும் ‘நேஷனல் கமிஷன் பார் அலைட் அண்டு ஹெல்த்கேர் ப்ரோஃபசன்ஸ்’ பாடத்திட்ட செயல்படுத்தல் இன்று கே.ஜி. பிசியோதெரபி கல்லூரியில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்தியாவிலேயே இதுபோன்று நடைபெற்ற முதல் மாநாடு என்பது இதுவே என கே.ஜி. கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
‘நேஷனல் கமிஷன் பார் அலைட் அண்டு ஹெல்த்கேர் ப்ரோஃபசன்ஸ்’ ஆணையத்தின் தலைவர் டாக்டர் யக்ஞா சுக்லா , கே.ஜி. மருத்துவமனையின் நிறுவன தலைவர் ‘பத்மஸ்ரீ’ டாக்டர் ஜி. பக்தவத்சலம், இந்த ஆணையத்தின்தேசிய தலைவர் டாக்டர் கே.எம். அண்ணாமலை, TNSAHCயின் மாநில நோடல் அதிகாரி மற்றும் செயலாளர் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த பல்கலைக்கழக முதல்வர்களும் டீன்களும் ஒரே மேடையில் கலந்துரையாடினர். பாடத்திட்ட வரைபடம், திறன் சார்ந்த கல்வி, மருத்துவப் பயிற்சி, ஆசிரியர் தயார்நிலை, மதிப்பீடு, டிஜிட்டல் ஒருங்கிணைப்பு என 13 அமர்வுகளில் ஆழமான கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்தது.

