கே.எம்.சி.ஹெச். செவிலியர் கல்லூரியில் பிஎஸ்சி. நர்சிங் மற்றும் டிப்ளோமா நர்சிங் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான விளக்கேற்றும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 16

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையின் தலைவர் நல்ல பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பி.எஸ்.ஜி. செவிலியர் கல்லூரியின் முதல்வர் ஜெயதீப மற்றும் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை மருத்துவர் டாக்டர் பிரியா பாரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதனைத் தொடர்ந்து, 160 செவிலிய மாணவ, மாணவியர்கள் விளக்குகளை ஏற்றி, செவிலியர் பணிக்கான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

3 16 scaled

இவ்விழாவில் கே.எம்.சி.ஹெச். செவிலியர் கல்லூரியின் முதல்வர் மாதவி, துணை முதல்வர் மலர்விழி, கே.எம்.சி.ஹெச். IHSR செவிலிய இயக்குநர் தீப்தி மேரி காந்திராஜ், செவிலிய இயக்குநர் மோகனாம்பாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.