ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் நிதி உதவியுடன் புதிய ஆய்வகம் திறக்கப்பட்டது. இதில் ஏ.ஐ.சி.டி.யின் கல்விப் புதுமைப் பிரிவின் துணைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் அபய் ஜெரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

நிகழ்விற்கு எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை தாங்கினார். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் டேவிட் ரத்தினராஜ், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
