இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணிகள் இரு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இதில் முதற்கட்டமாக, வீட்டுப் பட்டியல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் 1 முதல் தொடங்கித் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இக்கணக்கெடுப்பில், ஆகஸ்ட் 17ம் தேதி வரை 90% சதவீத பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 10% சதவீத பணிகளும் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதுவரை கணக்கெடுப்பாளர்கள் வராத வீடுகள் அல்லது விடுபட்ட பகுதிகளின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, ஏற்கனவே மண்டல வாரியாக உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது, பிரதான அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி கலையரங்க வளாகத்திலுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்திற்கான 8925975974, 8925840952 என்ற இரண்டு கூடுதல் எண்களைப் தொடர்பு கொண்டு, மாநகராட்சி பகுதிகளில் இதுவரை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக கணக்கெடுப்பாளர்கள் வராத பட்சத்தில், பொதுமக்கள் தங்கள் பகுதிக்குரிய விவரங்களைத் தெரிவிக்கலாம்.
