1990ம் ஆண்டு மருத்துவத்தில் மகத்தான சேவையைத் தொடங்கிய கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தனது பயணத்தின் 35வது ஆண்டைக் கொண்டாடி வருகிறது. மருத்துவத்தில் பல துறைகளைக் கொண்டுள்ளதோடு, புதிய சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்துவதிலும் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. குறிப்பாகப் புதிதாக வரும் மருத்துவ தொழில்நுட்பங்கள் இங்கு உடனடியாகக் கொண்டு வரப்பட்டு, சேவைகள் வழங்கப்படுகிறது.

பல சவாலான சிகிச்சைகளை இங்குள்ள மருத்துவர்கள் சமர்த்தியமாகச் செய்து, பல உயிர்களுக்கு மீண்டும் உயிர் தந்துள்ளனர். இதன் நிறுவனர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி அனைத்து தரப்பு மக்களுக்கும் உலகத் தரமான சிகிச்சையை வழங்கும் நோக்கில் மருத்துவமனையைக் கட்டமைத்துள்ளார். கோவை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து இங்குச் சிகிச்சைக்கு வருகின்றனர்.

kmch

பல லட்சக்கணக்கான மக்களின் ஆரோக்கியம் மற்றும் நோயைக் குணப்படுத்துவதில் தூணாக நின்று காத்து வருகிறது. மேம்பட்ட சிகிச்சைகள், பராமரிப்பு என மக்களிடம் நம்பகத்தன்மையை மேம்படுத்தியுள்ளது. 35 ஆண்டுகளாகப் பல தரப்பு மக்களின் நம்பிக்கையான மருத்துவமனையாக உயர்ந்து, உலக தரச் சேவையை உள்ளூரில் வழங்கி வருகிறது.