கிருஷ்ணா கல்லூரியில், தமிழ்நாடு அரசு, கோவை மாநகர காவல் மற்றும் உயிர் அமைப்பு இணைந்து நடத்திய ”ஹேக்கத்தான் 2025” போட்டியில் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மூன்றாம் இடம் பெற்றனர்.
மாணவர்கள் சாலை பாதுகாப்பு, விபத்து தடுப்பு மற்றும் ஏ.ஐ பவர்ட் இன்டெலிஜென்ட் ஆப் மூலம் விபத்துகளை தடுக்க புதிய கண்டுபிடிப்பை தயாரித்தனர். இதற்காக, அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.50,000 ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
விருதுகளை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர், போக்குவரத்து துணை கமிஷனர் அசோக் குமார், மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவன நிர்வாக அறங்காவலர் மலர்விழி ஆகியோர் வழங்கினர். மாணவர்களின் வெற்றியை கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.