போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் இருந்து, ஈச்சனாரி செல்லும் வழியே பாதாள சாக்கடை குழாய் நீர் முக்கால் கிலோமீட்டருக்கு வெளியேறி சென்று கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போன்ற சம்பவம் 15 நாட்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சம்மந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.