துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதியான கோவில்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (மே 28) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கோவில்பாளையம், கொண்டையம்பாளையம், மாணிக்கம்பாளையம் கோ-இண்டியா பகுதி, சர்க்கார் சாமக்குளம், வையம்பாளையம், கோட்டைபாளையம், குன்னத்துார், குரும்பபாளையம், மொண்டிகாளிபுதுார், காளிபாளையம், அக்ரகார சாமக்குளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின் தடை ஏற்படும். எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.