உலக இருதய தினத்தை முன்னிட்டு, கே.எம்.சி.ஹெச் கோவில்பாளையம் மருத்துவமனையின் சார்பில் மரம் நடுவிழா திங்கட்கிழமை நடைபெற்றது. நிகழ்விற்கு கே.எம்.சி.ஹெச் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி தலைமை தாங்கினார்.

மரம் நடும் விழாவில் அரவிந்தன் நர்சிங் ஹோம் டாக்டர் சுவாமிநாதன், எஸ்எஸ் குளம் பஞ்சாயத்து யூனியன் தலைவர் கோமளவள்ளி, பிளாக் மருத்துவ அதிகாரி டாக்டர் ஏகனா பிரபு, கோயமுத்தூர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாகராஜ், எஸ்எஸ் குளம் பஞ்சாயத்து யூனியன் உதவி தலைவர் விஜயகுமார், எஸ்எஸ் குளம் பஞ்சாயத்து யூனியன் செயல் அதிகாரி செந்தில் குமார், கோவில்பாளையம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் இளங்கோ மற்றும் கேஎம்சிஹெச் கோவில்பாளையம் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் டாக்டர் விமல்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

