கோவை, மதுக்கரை மரப்பாலத்தில் ரயில்வே கீழ்பாலத்தில் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளதால் இன்று முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
போக்குவரத்து மாற்றம்
மரப்பாலம் சாலை வழியாக கோவை – பாலக்காடு, பாலக்காடு – கோவை செல்லும் கனரக, இலகுரக வாகனங்கள் செல்ல முடியாது.
கோவை – பாலக்காடு மார்க்கம் – (ஒரு வழிப்பாதை) டவுன் பேருந்து, இலகுரக வாகனங்கள் மதுக்கரை சந்திப்பில் இருந்து இடதுபுறம் திரும்பி குவாரி ஆபீஸ் சாலை, குரும்பபாளையம் சாலை, மதுக்கரை மார்க்கெட் சாலை வழியாக செட்டிபாளையம் பிரிவுக்கு செல்லலாம்..
கனரக வாகனங்கள் (இருவழிப் பாதை) – ஆத்துப்பாலம் சந்திப்பில் இருந்து இடதுபுறம் திரும்பி குறிச்சி, ஈச்சனாரி சாலை வழியாக சென்று சேலம் – கொச்சின் சாலையில் வலதுபுறம் திரும்பி செல்லலாம்..
பள்ளி, கல்லூரி வாகனங்கள் (இருவழிப்பாதை) – ஆத்துப்பாலம் சந்திப்பு, சுந்தராபுரம் சந்திப்பில் வலது புறம் திரும்பி குறிச்சி, கண்ணமநாயக்கனுர் சாலையில், இடது புறம் திரும்பி சேலம் – கொச்சின் சாலையில் சென்று வலது புறம் திரும்பி செல்ல வேண்டும்.
அரசு பேருந்துகள் (இருவழிப்பாதை) – ஆத்துப்பாலம் சந்திப்பு, சுந்தராபுரம் சந்திப்பில் வலது புறம் திரும்பி, குறிச்சி கண்ணமநாயக்கனுர் சாலையில், வலதுபுறம் திரும்பி மதுக்கரை மார்க்கெட் வழியாக செட்டிபாளையம் பிரிவுக்கு செல்ல வேண்டும்.
பாலக்காட்டில் இருந்து கோவை மார்க்கம் (ஒரு வழிப்பாதை) இலகுரக வாகனங்கள், டவுன் பேருந்து செட்டிபாளையம் பிரிவில் வலதுபுறம் திரும்பி விறகுக்கடை பாலம் வழியாக சென்று ஏ.சி.சி தொழிற்சாலை சாலை வழி செல்லவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
