திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் சுங்கத்துறை அலுவலர்கள் இடையே கலந்துரையாடல் ‘டீ’ அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் கௌரவத் தலைவர் சக்திவேல், தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

துணைவன் போர்ட்டல் உருவாக்கம் குறித்து ஆடை ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில், ‘டீ’ மற்றும் திருச்சி சுங்கத்துறை இணைந்து செயல்படும் என சுங்கத்துறை ஆணையர் விமலநாதன் அறிவித்தார்.

இந்த ஆண்டு திருப்பூர் ஏற்றுமதி 15 சதவீதம் வளர்ச்சி எட்டும் எனவும், ரூ. 40,000 கோடி மதிப்பில் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வியாபாரம் ரூ. 30,000 கோடியாக இருக்கும் எனவும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், திருப்பூர் கிளஸ்டர் வளர்ச்சி மற்றும் பசுமை ஆடைகள் உற்பத்தியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் கூறினார்.