ஸ்வர்கா அறக்கட்டளை சார்பில், கோவை ப்ரூக்ஃபீல்ட் வணிக வளாக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்காக ஸ்வேக் கஃபே என்ற தேனீரகம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சொர்ணலதா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் போஸ் நிறுவனத்தின் சமூகநல மேம்பாட்டு துறையின் அதிகாரி இமானுவேல் அல்போன்ஸ், அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் குரு பிரசாத், தொழிலதிபர்கள் பாலகோபால், வசுத் பால் மேத்தா, வணிக வளாக மேலாளர் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு காபி, டீ, பப்ஸ், கேக், பிஸ்கட், குளிர்பானங்கள், தரமான முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

