சர்வேதச ஹாக்கி சம்மேளனத்தின் ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை விழிப்புணர்வு பயணம் மற்றும் அறிமுக விழா கோவை சுகுணா பிப் பள்ளியில் நடைபெற்றது.
சுகுணா மோட்டார்ஸ் மற்றும் கல்வி குழுமங்களின் தலைவரும், கோவை மாவட்ட ஹாக்கி அமைப்பின் தலைவருமான லட்சுமி நாராயணசாமி முன்னிலை வகித்தார்.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி, ஆட்சியர் பவன்குமார், உதவி ஆட்சியர் பிரசாந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா உடனிருந்தார். விழாவில் உலகக் கோப்பையும், போட்டியின் அதிகாரப்பூர்வ சின்னமான காங்கேயன் உருவமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

