கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள வி.சி.வி சிஷு வித்யோதயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கோவை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதவிழா நடைபெற்றது. இதில் கோவை மாநகரம் போக்குவரத்து கிழக்கு காவல் உதவி ஆணையர் சேகர் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பள்ளி செயலாளர் பல்லவி மன்றாடியார், அறங்காவலர் ஜெயேந்திர மன்றாடியார், முதல்வர் நளினி ராஜசேகர் மற்றும் துணை முதல்வர் கலைவாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.