ஓசூரில் நடைபெற்ற 17வது தேசிய அளவிலான குங்ஃபூ, கராத்தே, சிலம்பம், திறந்தநிலை சாம்பியன்ஷிப் போட்டியில் கோவை சுகுணா கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் ஸ்ரீமதி மற்றும் தீபிகா ஆகியோர் 18 வயதிற்குட்பட்டோருக்கான குங்ஃபூ போட்டியில் கலந்துகொண்டு தேசிய அளவில் முதல் இடம் பெற்றனர்.

மாணவிகளை கல்லூரியின் தலைவர் லட்சுமி நாராயணசாமி மற்றும் சுகுணா லட்சுமி நாராயணசாமி, செயலர் ஸ்ரீகாந்த் கண்ணன், இயக்குனர் மற்றும் செயலாளர் சேகர், முதல்வர் ராஜ்குமார் ஆகியோர் பாராட்டினர்.