சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் 2025 – 2026 கல்வியாண்டுக்கான வணிகவியல் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக தமிழக ஸ்டார்ட்அப் & இனோவேஷன் மிஷனின் கோயம்புத்தூர் பிராந்திய மைய திட்டத் தலைவர் காயத்ரி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இயக்குநர் சேகர், கல்லூரி முதல்வர் ராஜ்குமார், வணிகவியல் துறைத் தலைவர் மீனாட்சி சரதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். சங்க உறுப்பினர்களுக்கு பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
