இந்தியாவில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் ஆகாஷ் பயிற்சி நிறுவனத்தில், பயிற்சி பெற்ற மாணவர்கள் நீட் இளங்கலை தேர்வில் முன்னணி தரவரிசையில் இடம்பிடித்து சாதித்துள்ளனர்.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகியன. இதில் கோவையில் உள்ள ஆகாஷ் பயிற்சி நிறுவனத்தின் கிளைகளில் படித்த மாணவ, மாணவிகள் முன்னணி தரவரிசையில் இடம் பிடித்துள்ளனர். குறிப்பாக, கோவையைச் சேர்ந்த மாணவர்கள் மதுநந்தன் தேசிய அளவில் 619ம் இடத்தையும், கவின் 1996ம் இடத்தையும் பெற்று கவனம் ஈர்த்துள்ளனர்.
இந்நிலையில், சிறந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளை பாராட்டும் நிகழ்வு கோவை அவிநாசி சாலையில் உள்ள ஆகாஷ் பயிற்சி நிறுவனக் கிளையில் நடைபெற்றது. நிகழ்வில் மாணவ, மாணவிகளுக்கு மலர் மாலைகள், பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். மேலும் விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆகாஷ் நிறுவன நிர்வாகிகள் மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். ஏரியா சேல்ஸ் ஹெட் மலர் செல்வன் நிகழ்வில் பங்கேற்றார்.
மாணவர்கள் கூறுகையில்: எங்களுக்கு வழிகாட்டிய ஆகாஷ் நிறுவனத்திற்கு மிக்க நன்றி. கட்டமைக்கப்பட்ட பாடத்திட்டம், நிபுணத்துவம் வாய்ந்த கற்பித்தல், தனிப்பட்ட வழிகாட்டுதல்கள், சிக்கலான தலைப்புகளை குறுகிய காலத்தில் வெற்றிகரமாக கையாள உதவின. ஆகாஷ் நிறுவனம் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியம் இல்லை எனக் கூறினர்.
“இந்த வெற்றி, மாணவர்களின் கடின உழைப்பு, மனோபூர்வ முயற்சிகளை மட்டுமல்லாது, பெற்றோர்களின் ஆதரவும், எங்கள் கல்வி குழுவின் முழுமையான ஈடுபாட்டையும் வெளிப்படுத்துகிறது” என ஆகாஷ் பயிற்சி நிறுவனத்தின் கல்வி மற்றும் வணிகத் தலைமை நிர்வாகியான தீராஜ் குமார் மிஸ்ரா கூறினார்.
