ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் பக்கவாத விழிப்புணர்வு மற்றும் அதன் தடுப்பு குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்வின் ஒரு பகுதியாக, பக்கவாத விழிப்புணர்வுக்கான பதாகை  வெளியிடப்பட்டது.

தலைமை செயல் அதிகாரி ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் குமார், மருத்துவ இயக்குநர் டாக்டர் ராஜகோபால் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நரம்பியல் துறைத் தலைவர் மற்றும் தலைமை நரம்பியல் நிபுணர் டாக்டர் அசோகன், நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா தேவி, நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் வேதநாயகம்,  மூத்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் துறைத் தலைவர் – நுண்துளை மூளை மற்றும் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விக்ரம், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் திவ்யா,  நரம்பியல் மற்றும் நுண்துளை நிபுணர் டாக்டர் முத்துராஜன் உள்ளிட்டோர் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

பக்கவாதத்திற்கான அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது. உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது, பக்கவாதத்திற்குப் பிறகு வழங்கப்படும் பராமரிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் விளக்கப்பட்டது. முகம் சோர்வு, கைகள் பலவீனம், பேசுவதில் சிரமம் பொதுவாக காணப்படும் எச்சரிக்கை அறிகுறிகள் ஆகும்.

ரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் நீரிழிவு நோய்க்கு வழக்கமான சுகாதார பரிசோதனைகள், சீரான உணவு மற்றும் போதுமான நீர் அருந்துதல், தொடர்ச்சியான உடற்பயிற்சி செய்யுதல், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதலைத் தவிர்த்தல், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல் ஆகிய வாழ்க்கைமுறை மாற்றங்கள் செய்வது அவசியம் என அறிவுறுத்தப்பட்டது.