கோவை எஸ்.என்.எஸ் இனோவேஷன் ஹப்பில், ஸ்டார்ட்அப் கலாப் ஸ்பேஸ்சை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.
நிகழ்வில் அமைச்சர் பேசியதாவது: தொழில்நுட்ப புதுமைகள் மாநிலம் முழுவதும் பரப்ப வேண்டும். கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம் என தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள திறமைகளை ஊக்குவித்து உலகத் தரத்தில் போட்டியிடக்கூடிய ஸ்டார்ட் அப்களை உருவாக்க வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில் 1000 ஏஐ ஸ்டார்ட் அப் உருவாக்கும் எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனங்களை பாராட்டினார்.
எஸ்.என்.எஸ் இனோவேஷன் ஹப்பின் தொழில்நுட்ப இயக்குநர் நளின் விமல் குமார் கூறும்போது: செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்பை அனைவருக்கும் எளிமையாக வழங்குவதே எங்கள் நோக்கம். இந்த புதிய கலாப் ஸ்பேஸ் மூலம் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், உள்ளூர் தொழில் முனைவோர் பயன்பெறுவர் என்றார்.
