ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் வனம் இந்தியா பவுண்டேஷன் சார்பில் தொடர் வருமானம் தரும் காய்கறி சாகுபடி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் பங்கேற்றனர். பல்லடம் வனம் இந்தியா பவுண்டேஷன் செயலாளர் ஸ்கை சுந்தரராஜ், முன்னோடி இயற்கை விவசாயிகள் கேத்தனூர் பழனிசாமி, வாவிபாளையம் சுந்தரமூர்த்தி ஆகியோர் குத்து விளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி  வைத்தனர். இதில் வல்லுநர்கள், முன்னோடி விவசாயிகள் பேசினர்.

பூச்சியியல் வல்லுநர் பூச்சி செல்வம் பேசுகையில்: பூச்சிகளால் காய்கறிப் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. பூச்சிகள், முட்டை, புழு, கூட்டுப்புழு, பூச்சிகள் என 4 அவதாரங்களை எடுக்கின்றன. பூச்சிகள், கூட்டுப்புழுக்களாக இருக்கும் போதே அவற்றை அழிக்க வேண்டும். அதற்கு, மண்ணை கூடுதல் ஈரமாக வைத்திருக்க வேண்டும். வேப்பங்கொட்டைத் தூளை மண்ணில் கலந்து விட வேண்டும். செடிகளைத் திண்ணும் பூச்சிகள் தீமை செய்யும் பூச்சிகளாகவும், தீமை செய்யும் பூச்சிகளைத் தின்னும் பூச்சிகளை நல்ல பூச்சிகளாகவும் நாம் அடையாளம் காணலாம் எனக் கூறினார்.