எஸ்.ஆர்.எஸ்.ஐ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சி3டெக் செஸ் அகாடமி சார்பில் பள்ளியின் நிறுவனர் வேலுமணி அம்மாள் நினைவு சதுரங்க போட்டி, பள்ளி வளாகத்தில் உள்ள ராமகிருஷ்ணா உள்விளையாட்டு அரங்கத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
பள்ளியின் தாளாளர் ஸ்ரீ.கோபால கிருஷ்ணன் சதுரங்கப் போட்டியினை துவங்கி வைத்தார். இதில் 142 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். 13, 11, 9 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர்கள் என இரு பிரிவுகளாக கலந்து கொண்டனர். வெற்றி பெறும் ஒவ்வொரு வயது பிரிவிற்கும் தலா ரூ 10,000 ரொக்க பரிசாக மொத்தம் 6 பிரிவுகளுக்கு ரூ 60,000 வழங்கப்படுகிறது.
நிகழ்வில் பள்ளியின் செயலாளர் ஜெயகண்ணன், முதல்வர் சரஸ்வதி, ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி, சி3டெக் செஸ் அகாடமி தலைமை நடுவர் கணேஷ், பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

