ஸ்ரீ ராமகிருஷ்ணா நர்சிங் கல்லூரியில் விளக்கு ஏற்றும் விழா நடைபெற்றது. எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் விழாவிற்கு தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் கிரிஜாகுமாரி வரவேற்றார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் முதன்மை செவிலியர் அதிகாரி கிரிஜா, பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உறுதிமொழியை வாசிக்க, முதலாம் ஆண்டு செவிலியர் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
தலைமை விருந்தினராக பங்கேற்ற நர்சிங் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சீதாலட்சுமி பேசுகையில், மாணவர்கள் தங்கள் அறிவைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். நர்சிங் தொழிலைப் பற்றிய நேர்மறையான அணுகுமுறையை வெளிப்படுத்த வேண்டும். நோயாளிகளுக்கு நர்சிங் பராமரிப்பை வழங்க போதுமான திறமையைக் கொண்டிருக்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்குவதோடு, சொந்த ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கவனித்துக்கொள்வதும் முக்கியம் என்றார்.
