ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 30வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. தலைமை விருந்தினராக என்.சி.சி குழு தலைமையகம், கோயம்புத்தூர் குழுவின் நிர்வாக அதிகாரி கர்னல் சுவாமி கலந்து கொண்டார்.

எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.

விளையாட்டு போட்டிகளில் தடகள மற்றும் குழு போட்டிகள் பல்வேறு அணிகளாகப் பிரிக்கப்பட்டு நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆண்கள் பிரிவில் தனிநபர் சாம்பியன் பட்டத்தை 3ம் ஆண்டு மாணவர் எஸ்வந்த் பெற்றார். மாணவிகள் பிரிவில் தனிநபர் சாம்பியன் பட்டத்தை 3ம் ஆண்டு ரோபோடிக்ஸ் மாணவி நட்சத்திரா பெற்றார்.