ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், குளோபல் எஃப்.டி.ஐ., பிரைவேட் லிமிடெட் நிறுவனமும், மாணவர்களின் கல்வி மற்றும் தொழில்முறை பயிற்சி வளர்ச்சிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன.
இந்நிகழ்ச்சி இன்று (05.02.2025) எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது. எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், குளோபல் எஃப்.டி.ஐ. நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் நாராயணன் நம்பியார் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம். ஏ.சி.சி.ஏ. படிப்பில் சேரும் மாணவர்களுக்கு தொழில்முறை சார்ந்த பாடத்திட்டங்கள் மற்றும் தகுதியான பேராசிரியர்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்படும். கூடுதலாக, குளோபல் எஃப்.டி.ஐ. நிறுவனத்தின் பயிற்றுநர்களும் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்.
இந்த ஒப்பந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் விஜயகுமார், பி.காம். பி.ஏ. துறைத்தலைவர் சந்தான கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
