ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை சார்பில் உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு வாக்கத்தான் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது. நிகழ்வினை எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் மற்றும் கோவை மாவட்ட காவல் ஆணையர் சரவண சுந்தர் ஆகியோர் கொடி அசைத்து துவங்கி வைத்தனர்.