இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்கல்வி துறை மற்றும் கோவை மாவட்ட பள்ளிக் கல்விதுறை சார்பாக, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சிலம்பம், ஜூடோ மற்றும் டெனிகாய்ட் விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 7 முதல் 10 வரை கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
போட்டியில் கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து 14, 17, 19 வயதுடைய மாணவ, மாணவியர்கள் பங்கேற்று வருகின்றனர். கோவையில் இருந்து 32 பள்ளிகளில் இருந்து சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
வெற்றி பெறும் அணியினருக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட உள்ளது. போட்டிக்கான ஏற்பாடுகள் கல்லூரியின் உடற்கல்விதுறை சார்பாக செய்து கொடுக்கப்பபட்டுள்ளது. முதல் இரண்டு இடங்களைப் பிடித்து வெற்றிபெறும் வீரர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, பாலமுரளி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியினை துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் கலந்து கொண்டார்.
கல்லூரியின் செயலாளர் சரசுவதி தலைமை வகித்தார். நிர்வாக செயலாளர் பிரியா முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் பொன்னுசாமி போட்டியில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்றார்.

