பருவமழை கடந்த வியாழன் முதல் கோவை மாநகரில் பெய்து வரும் நிலையில், மழைநீர் வெகுநேரம் தேங்குவதை தடுக்க கோவை மாநகராட்சி சார்பில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.நள்ளிரவு நேரங்களிலும் மாநகராட்சி தரப்பில் பணிகள் நடைபெறுகிறது.

ஆனால் சனிக்கிழமை பெய்த கனமழைக்கு பின்னர் பொதுமக்கள் தங்களின் பகுதிகளில் மழைநீர் தேங்குவது பற்றி காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தபோது சில விவரங்கள் வெளிவந்தன.

அவிநாசிலிங்கம் கல்லூரி- பாரதி பூங்கா வழியே கனமழை நேரங்களில் வாகனஓட்டிகள் சென்றபோது கடும் மழைநீர் தேக்கம் ஏற்பட்டிருந்தது காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த இடங்களின் பல இடங்களில் கழிவுநீர் செல்ல அமைக்கப்பட்டுள்ள வழித்தடங்களில் செடிகள் நிறைய முளைத்துள்ளன. இவற்றுடன் குப்பைகளும் சேர்ந்துகொள்வதால் நீர் தேக்கத்தை ஏற்படுத்துகின்றன.
SOCIALRAIS scaled

மேலும் இந்த வழியே பல பகுதிகளில் மின் விளக்குகள் எரிவதில்லை. மழைநாட்களில் மாலை நேரங்களில் மிகுந்த இருட்டுடன் இப்பகுதி உள்ளது. கே.எப்.சி, ஸ்டார்பக்ஸ் அமைந்துள்ள வளாகம் அருகே மின் விளக்குகள் இருந்தாலும், அங்கிருந்து இடது பக்கம் திரும்பி ஜி.சி.டி. வழியே லாலி ரோடு செல்லும் போது தெருவே விளக்குகள் பல இடங்களில் எரிவதில்லை என்பது தெரியவருகிறது.
DARKNESS scaledசரியாக லாலி ரோடு சிக்னலுக்கு இடது பகுதியில் வனக்கல்லூரிக்குட்பட்ட வளாகத்தில் இருந்து மழைநீர் வெளியேறுகிறது. இந்த நீர் சாலையில் தேங்குவதால், அதை பாதாள சாக்கடைக்குள் அனுப்ப அந்த பகுதியின் 3 இடங்களில் குழாய் மூடிகள் திறந்துவைக்கப்பட்டுள்ளன.

மாநகராட்சியை தொடர்பு கொள்ள தெரியாதவர்கள், அவசர உதவி எண்கள் பற்றி விழிப்புணர்வு இல்லாதவர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் நிலையை வெளிப்படுத்துகின்றனர். எனவே மாநகராட்சி இந்த தகவல்களையும் கவனித்து அங்கு நிலை அறிந்து நடவடிக்கையை எடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பு உள்ளது.