டாக்டர் எஸ்.என்.எஸ். ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரி மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக் குழுமம் இணைந்து நடத்தும் தேசிய அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கலைத் திருவிழா ‘மிராரி 2கே25’ நடைபெற்றது.

கல்லூரியின் தாளாளர் ராஜலட்சுமி குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.  எஸ் என்.எஸ் கல்விக் குழுமங்களின் செயலர் மற்றும் தொழில்நுட்ப இயக்குநர் எஸ்.நளின் விமல் குமார், சி.இ.ஓ முனைவர் டேனியல், கல்வி ஆலோசகர்  ஞானசேகரன், புல முதன்மையர் பழனிச்சாமி ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சிறப்பு விருந்தினராக பாடகி மானசி கலந்து கொண்டார். கல்லூரியின் முன்னாள் மாணவரும் வழக்கறிஞருமான முரளிதரன் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் உரையாற்றினார். இதில், தமிழகம் முழுவதிலும் உள்ள 55 கல்லூரிகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைப் பெற்றனர்.