கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் இந்திய தேயிலை வாரியம் இணைந்து நடத்திய உலக சாதனை முயற்சியில், 30 நிமிடங்களில் 300 வகையான புதுமையான தேநீர் தயாரிக்கப்பட்டது. இதில், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் மற்றும் குன்னூர் தேயிலை வாரியத்தின் செயல் இயக்குநர் முத்துக்குமார் ஐ.ஏ.எஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, உலக சாதனை முயற்சிக்கு ஆதரவளித்தனர்.