இந்தியாவிலேயே முதல்முறையாக ஸ்ரீ ராமகிருஷ்ணா டென்டல் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அதிநவீன சிமுலேட்டர் அறை இன்று துவக்கப்பட்டது.

சிமுலேட்டர் அறையில் பல் சிகிச்சை பயிற்சிக்கான வீ.ஆர். என்றழைக்கப்படும் வெர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம், ஏ.ஆர். என்றழைக்கப்படும் ஆகுமென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பம் மற்றும் ஹாப்டிக் டெக்னாலஜி ஆகியவை இணைந்த அதிநவீன Dente SIMtoCARE  அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

இதனை எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் துவக்கி வைத்தார். நிகழ்வில் இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன், தலைமை செயல் அதிகாரி ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் குமார், டென்டல் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் தீபானந்தன், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன் கலந்து கொண்டனர்.

இந்த அதிநவீன அமைப்பு மூலம் பல் சிகிச்சை பற்றி பயிலும் மாணவர்கள் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு சூழலில் பற்கள் தொடர்பான பாதிப்புகள் உள்ளவர்களுக்கு வெவ்வேறு சிகிச்சை வழங்குவது எப்படி என்பதை நேரில் நின்று கற்பதை போல உணர்ந்து கற்க முடியும்.

இது கற்றல் அனுபவத்தை பல மடங்கு மேம்படுத்தக்கூடிய உயர் தொழில் நுட்பம் என்பதால் மாணவர்கள் சிறந்த முறையில் செய்முறை அனுபவத்தையும் பெற முடியும்.