கோ. குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களின் விழா அனுசரிக்கப்பட்டது. புற்றுநோய் சிகிச்சையில் குணமடைந்த 100க்கும் மேற்பட்டோர் “நம்பிக்கையின் ஒளி” என்ற தலைப்பில் “புற்றுநோய் என்பது முடிவல்ல, நம்பிக்கையுடன் அதை வெல்லலாம்” என்ற உண்மையை பிரதிபலிக்கும் விதமாக தீபங்கள் ஏற்றி, தங்கள் பயணத்தையும், சாதனைகளையும் பகிர்ந்தனர்.
சிகிச்சையளித்த மருத்துவர்கள், நன்கொடையாளர்கள், ஆலோசகர்கள் ஆகியோரும் தீபங்கள் ஏற்றி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான சிகிச்சை மூலம் மீட்புக்கான நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியை ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் சந்தோஷ் துவக்கி வைத்தார். மாற்று மருத்துவ நிபுணர்கள் டாக்டர் பாபு, டாக்டர் சுப்ரமணிய மூர்த்தி, டாக்டர் பிரியதர்ஷினி யோகா, மூச்சுப் பயிற்சி, லாஃபிங் தெரபி பயிற்சி வழங்கினார்.