கோவை பேரூர் பகுதியில், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சாக்கடை கால்வாயில் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இல்லாமல் இறங்கி சுத்தம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

cover d2 scaled

தூய்மைப் பணியாளர்களை எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கழிவுநீர், சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம்.

தங்களது உடலை வருத்திக்கொண்டு தூய்மைப் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் தலைக்கவசம், கையுறைகள், முகக்கவசம், பாதுகாப்பு காலணிகள், உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது கட்டாயம்.

இப்படி இருக்கும் நிலையில் பேரூர் பகுதியில் சாதாரண கையுறை, முகக்கவசம் கூட வழங்காமல் சாக்கடை கால்வாயை தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்ய வைத்தது கண்டிக்கத்தக்கது. இதனால் அவர்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

cover d4 scaled

எனவே, மாநகராட்சி நிர்வாகம் அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை முறையாக வழங்குவதுடன், பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதையும் தொடர்ந்து கண்காணித்து, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.