ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ மாணவியர் வரவேற்பு விழா நடைபெற்றது.

எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசுகையில்: மாணவர்கள் கல்லூரியின் சிறப்புத் திறன் மையங்கள்கள், ஆய்வகங்கள் மற்றும் நூலகம் உள்ளிட்ட மேம்பட்ட வசதிகளையும், கற்றல் வாய்ப்புகளையும் முழுமையாகப் பயன்படுத்தி, தங்களது திறன்களை மேம்படுத்தி, சிறந்த தொழில் வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.`

சிறப்பு விருந்தினராக சென்னை, மஹிந்திரா ரீசர்ச் வேலி தொழில்நுட்பப் புத்தாக்கம், துணைத் தலைவர் சங்கர் வேணுகோபால் கலந்து கொண்டு பேசுகையில்: நான்கு ஆண்டுகளில் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முக்கியப் பொறியியல் துறையைத் தாண்டி, அதனுடன் தொடர்புடைய பிற பொறியியல் துறைகள் குறித்தும் அறிவைப் பெற வேண்டும்.

இன்றைய பல்துறை தொழில்நுட்பச் சூழலில், ஒரு மொபிலிட்டி இன்ஜினியர் பல்வேறு பொறியியல் துறைகள் குறித்த அடிப்படை அறிவைப் பெற்றிருக்க வேண்டும். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

கௌரவ விருந்தினராக முன்னாள் மாணவரும், கவாசகி ரோபோட்டிக்ஸ் மென்பொருள் பொறியாளர் ரூபன்குமார் கலந்து கொண்டார்.