திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில், நெசவாளர் காலனியில் விரிவுபடுத்தபட்ட ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க கௌரவத் தலைவர் சக்திவேல் ஷோரூமை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். திருப்பூர் கிட்ஸ் கிளப் கல்வி நிறுவனத் தலைவர் மோகன் கார்த்திக் முதல் விற்பனையைப் பெற்றுக் கொண்டார்.
விழாவிற்கு வந்திருந்தவர்களை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் நாகராஜன் வரவேற்றார். திருப்பூர் ஹீரோ ஃபேஷன் சுந்தரமூர்த்தி, ராம்ராஜ் காட்டன் இயக்குநர்கள் சுமதி நாகராஜன், ஆர்த்திகா அருண் ஈஸ்வர், இணை நிர்வக இயக்குனர் அஸ்வின், தலைமைச் செயல் அதிகாரிகள் செல்வகுமார், கணபதி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
