கோவை மாநகரில் இடைநில்லா குடிநீர் திட்ட பணிகளுக்காகவும் , பிற பொதுப்பணிகளுக்காகவும் பல இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. மாநகரட்சியின் திட்டப்பணிகளை டெண்டர் எடுக்கும் நிறுவனங்கள் சாலைகளை தோண்டி பணிகளை செய்துவிட்டு அதை சரியாக மூடுவதில்லை என்ற  குற்றச்சாட்டு பல காலமாக உள்ளது.

அவர்களில் சிலர் சரியாக சாலைகளை சீரமைத்தாலும் பலர் தோண்டிய குழிகளை வெறும் மண்ணை போட்டு மூடிவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் பணிகள் முடிந்தாலும் அந்த வழியே பிற்காலத்தில் செல்லும் வாகனஓட்டிகள் தான் அதிகம் பாதிப்படைகின்றனர்.

குறிப்பாக மழைக்காலங்களில் குண்டுகுழிகளில் மழைநீர் தேங்கிவிடுவதால் வாகன ஓட்டிகளுக்கு அவை இருப்பது தெரிவதில்லை. இப்படிப்பட்ட நிலையில் சாலையில் செல்லும் வாகனங்கள் சிக்கி, சேதமாகி செல்லவேண்டிய நிலை தொடர்ந்து ஏற்படுவதை காணமுடிகிறது.

இப்போது கோவை மாநகரில் லேசான மழை பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் சாலைகளில் உள்ள குண்டுகுழிகளில் மழைநீர் தேங்குகிறது. இதில் சிக்கும் வாகனங்களின் உரிமையாளர்கள், புலம்பி செல்கின்றனர்.

இந்த துயரம் தீருமா?