இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கோயம்புத்தூர் மாநகராட்சி பள்ளிகளுக்கு இடையே வினாடி – வினா இறுதிப் போட்டி நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது. நிகழ்விற்கு தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.