பி.எஸ்.ஜி. மருத்துவமனையானது கடந்த ஆண்டு துவங்கப்பட்ட ‘வைத்யா’ எனும் இல்லம் தேடி மருத்துவ சேவையில் வெற்றிகரமாக முதலாம் ஆண்டை நிறைவு செய்தது. இந்நிலையில், முதலாம் ஆண்டு நிறைவு விழா மருத்துவமனை வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பி.எஸ்.ஜி.மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் புவனேஸ்வரன், பி.எஸ்.ஜி. இன்ஸ்டிடியூட் ஆப் ஆன்காலஜி இயக்குநர் டாக்டர் பாலாஜி, உள்துறை சுகாதார சேவைகள் துறை ஆலோசகர் டாக்டர் ரஜித் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், பி.எஸ்.ஜி., ஹோம் கேர் துறையானது கடந்த ஆண்டில், 3000க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இல்லம் தேடி சென்று தரமான மற்றும் சுகாதார சேவையை வழங்கியுள்ளது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், உளவியல் நிபுணர்கள் உட்பட பல்வேறு மருத்துவ குழுவினர் சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.