பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் மற்றும் எலக்ட்ரானிக் மீடியா துறை சார்பில் 19-வது தென்னிந்திய குறும்பட திருவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு கல்லூரி முதல்வர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் கண்ணையன் முன்னிலை வகி்ததார். விஷுவல் கம்யூனிகேஷன் துறைத் தலைவர் ராதா வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக ஜெய் பீம் மற்றும் வேட்டையன் திரைப்பட இயக்குநர் ஞானவேல், குடும்பஸ்தன் திரைப்பட இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி, திரைப்படத் தொகுப்பாளர் அணில் கிருஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இவ்விழாவிற்காக தென்னிந்தியாவில் உள்ள 60 கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர், தங்களின் குறும்படங்களை அனுப்பி வைத்திருந்தனர். இவற்றில் சிறந்த 14 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, திரையிடப்பட்டன.

துவக்க விழாவில்,  ஜெய் பீம் திரைப்பட இயக்குநர் ஞானவேல் பங்கேற்று பேசியதாவது: சமூக பிரச்னைகளை பிரதிபலிக்கும் வகையில், கல்லூரி மாணவர்கள் சிறப்பான குறும்படங்களை உருவாக்கி வருகின்றனர். இந்த மாணவர்களின் படைப்பு ஆற்றலை ஊக்கப்படுத்தும் வகையில், பி.எஸ்.ஜி கல்லூரியின் பதிவுகள் குறும்பட விழா நடத்தப்படுகிறது. இந்தத் விழாவில் திரையிடப்பட்ட அனைத்து குறும்படங்களும் சிறப்பாக இருந்தன என்றார்.

குடும்பஸ்தன் திரைப்பட இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி பேசுகையில், புதிய தலைமுறை மாணவர்களின் சிந்தனையும், செயல்பாடும் அதிகவேகமாக இருக்கிறது. அவர்களின் படைப்புகளும் வித்தியாசமாக இருக்கின்றன. இத்தகைய விழாவின் மூலமாக மாணவர்களின் படைப்புகளை காண ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.

குறும்படங்கள் திரையிடலை தொடர்ந்து, சிறந்த குறும்படம், இயக்குநர், நடிகர், நடிகை, ஒளிப்பதிவாளர், திரைக்கதை, வசனம் ஆகிய பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட்ட