பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் 2025–2026 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான வலுதூக்கும் போட்டியில் பங்கேற்றனர். இப்போட்டிகள் சென்னை, ஹிந்துஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்றன.

பாரதியார் பல்கலைக்கழக அணியில் நவீன் (59 கிலோ பிரிவு), தர்ஷன் (74 கிலோ பிரிவு), தரனீஷ் (83 கிலோ பிரிவு), சுஸில் அஹமது (83 கிலோ பிரிவு), கேசவ் கார்த்திக் (93 கிலோ பிரிவு), சஹார் (120 கிலோ பிரிவு), அஸ்வால்ட் பிரவீன்ராஜ் (+120 கிலோ பிரிவு) ஆகிய 7 பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் இடம்பெற்றனர்.

இப்போட்டியில் நவீன், அஸ்வால்ட் பிரவீன்ராஜ் ஆகியோர் இரண்டு தங்கப் பதக்கங்கள், தரனீஷ் ஒரு வெண்கலப் பதக்கம் மற்றும் தர்ஷன் நான்காவது இடத்தைப் பெற்றனர்.

மேலும், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான வலுதூக்கும் போட்டியில் பாரதியார் பல்கலைக்கழக அணி மொத்தம் 39 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

பதக்கங்களையும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்ற மாணவர்களை, கல்லூரியின் செயலாளர் கண்ணையன், கல்லூரி முதல்வர் ஜெயந்தி மற்றும் உடற்கல்வித் துறை இயக்குநர் நவநீதன் ஆகியோர் பாராட்டினர்.