பௌர்ணமி தினத்தில் மேற்கொள்ளப்படும் பூஜைகள் பல வகையான மனநிறைவு, மகிழ்ச்சி மற்றும் நன்மைகளைப் பெற உதவுகின்றன.
இந்நாளில், அம்பிகைக்கு சிறப்பு பூஜை செய்து, நெய் தீபம் ஏற்றி, குங்கும அர்ச்சனை செய்துவந்தால், குடும்ப நலன், மகிழ்ச்சி, ஆரோக்கியம் என்பவற்றை நல்கும் என நம்பப்படுகிறது. அதேபோல், சந்திர காயத்ரி மந்திரம், சந்திர வழிபாடு செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி, மன நிம்மதியை அதிகரிக்கும்.
பௌர்ணமியில் சத்யநாராயண பூஜை செய்வது மகத்தான பலனைத் தரும். தொடர்ந்து பூஜை செய்துவரப் பொருளாதார வளம் மற்றும் குடும்ப நலத்தை உயர்த்தும். அதேபோன்று, கங்கை, காவிரி போன்ற நதிகளில் நீராடுவது பாவங்களை நீக்கி, வாழ்வை மேன்மையுடைய செய்யும் என்று நம்பப்படுகிறது. மஹாமந்திரங்கள் அல்லது நாமசங்கீர்த்தனங்களை ஜபிப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது. இது ஆன்ம சாந்தி மற்றும் மனக்கவலைகளை அகற்றுவதற்கான வழி எனவும் நம்பப்படுகிறது.ஏழை மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு அன்னதானம் செய்வது நல்லது. பௌர்ணமி தினத்தில் பொருள் கடன் வாங்கல் மற்றும் கொடுப்பது தவிர்க்க வேண்டும். பெளர்ணமி தினத்தில் செய்யப்படும் பூஜைகள் ஆன்மிக மகிழ்ச்சி, செல்வ வளம் மற்றும் குடும்ப நலன்களை ஏற்படுத்தும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.