கடந்த 23ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் முடிவடைந்த நிலையில், வரும் மே மாதம் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் கோவை பெரியதடாகம் அருகே உள்ள அனுவாவி சுப்பிரமணியர் கோவிலில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி அருண்குமார் கூட்டணிக் கட்சியினரோடு, மலையில் சுமார் 600 படிகட்டுகள் ஏறி சென்று சாமி தரிசனம் செய்தார்.